2023 ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு.. எந்தெந்த அணிக்கு எவ்வளவு தெரியுமா.?
IPL 2023 price amounts
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுத்திப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
மேலும், 3வது இடம் பிடித்த மும்பை அணிக்கு 7 கோடி ரூபாயும், 4வது இடம் பிடித்த லக்னோ அணி 6.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வாங்கப்பட உள்ளது.
மேலும், அதிக ரன்கள் அடித்தவர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்குதலா 15 லட்சமும், வளர்ந்துவரும் வீரர் விருதிற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது. மதிப்புமிக்க வீரர் விருதுக்கு ரூ. 12 லட்சமும் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ. 12 லட்சமும் வழங்கப்பட உள்ளது.