ஐ.பி.எல்.2025 : இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நீக்கம்? - Seithipunal
Seithipunal


2025 ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது  அணி உரிமையாளர்களுக்கு மத்தியில் காரசாரமான விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்படுமா அல்லது மெகா ஏலம் நிறுத்தப்படுமா என்ற கேள்விகளுக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்திய மீட்டிங்கில் நாங்கள் அணி நிர்வாங்களுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். இம்பேக்ட் வீரர் விதிமுறையில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன.

ஆல் ரவுண்டர்களின் பங்கு குறைவது அதனுடைய பாதகமாக இருக்கிறது. ஒரு எக்ஸ்ட்ரா இந்திய வீரர் வாய்ப்பு பெறுவது அதனுடைய சாதகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நிறைய பணத்தை முதலீடு செய்யும் ஒளிபரப்பாளர்களையும் நாங்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் ஒரு நிர்வாகியாக எனக்கு விளையாட்டு பெரியது. அதைப் பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம். அதே போல் மெகா ஏலம் பற்றி அனைவரிடமும் கருத்து கேட்டுள்ளோம். அதனுடைய இறுதி முடிவு எங்களிடம் உள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 Abolition of Impact Player Rule


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->