ஐபிஎல் 2025; நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு; அதிரடி காட்டிய 'கிங்' கோலி..!
IPL 2025 Bangalore registered their first victory by defeating the defending champions Kolkata
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 08 வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க, முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 02-வது பந்தை டி காக் பவுண்டரி அடித்தார்.0 3-வது பந்தில் கேட்ச் கொடுக்க,அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.
அடுத்தாததாக 05-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டி காக் ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 03 ஓவரில் கொல்கத்தா 01 விக்கெட் இழப்பிற்கு 09 ரன்களே மாத்திரமேஎடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரஹானே ஆடினார்.

04-வது ஓவரை ரஷிக் சலாம் வீச, அந்த ஓவரில் 16 ரன்கள் குவிக்கப்பட்டது. அடுத்து குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 06-வது ஓவரில் 20 ரன்களும் கொல்கத்தா எடுத்தது. கொல்கத்தா அணி பவர்பிளேயில் 01 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது. மேலும், 09-வது ஓவரை சுயாஷ் சர்மா வீச இந்த ஓவரின் 02-வது பந்தை சிக்சருக்கு அடித்து, ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி 20 போட்டியில் அவர் 36 வது அரைசத்தை அடித்துள்ளார்.
இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்க்க, அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும் போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் பெரிதாக சொக்கிப்பவில்லை. சிறப்பாக விளையாடிய ரகானே 11-வது ஓவரின் 03 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 06 பவுண்டரி, 04 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.
04-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகுவன்ஷி ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்ற மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் 07 பந்தில் 06 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், ரசல் 03 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக கொல்கத்தா 15.4 ஓவரில் 06 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே எடுத்திருந்தது. அடுத்து, 07-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். டெத் ஓவரில் கடைசி 04 ஓவரில் அதிரடியாக ஆட கொல்கத்தா அணியில் வீரர்கள் இல்லை. 17-வது ஓவரை லிவிங்ஸ்டன் வீச, இந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 04 ரன்களே மட்டுமே கிடைத்தது. 18-வது ஓவரை ஹெசில்வுட் வீச, இந்த ஓவரில் ரகுவன்ஷி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் 10 ரன்கள் கிடைத்தது.
மேலும், கடைசி ஓவரை ஹேசில்வுட் வீச, இந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 05 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 08 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே அடித்தது. கடைசி0 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடித்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 02 விக்கெட் வீழ்த்தினார். குருணால் பாண்ட்யா 29 ரன்கள் கொடுத்து 03 விக்கெட் வீழ்த்தினார். யாஷ் தயால், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 01 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
ஆர்சிபி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 03 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 07 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
English Summary
IPL 2025 Bangalore registered their first victory by defeating the defending champions Kolkata