IPL 2025: தெறிக்கப் போகும் இரண்டு போட்டிகள்...! சென்னை vs ராஜஸ்தான், டெல்லி vs ஹைதராபாத் இன்று மோதல்!!!
IPL 2025 Two matches Chennai vs Rajasthan Delhi vs Hyderabad clash today
கடந்த 22ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் 2025: 18-வது சீசன் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இதில் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.இந்த லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிட்டு இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் எதிர்கொண்டு விளையாடுகிறது.
இதில் பெங்களூரு அணியிடம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2 வது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என நம்பப்படுகிறது.
ஐ.பி.எல். தொடரில் இந்த 2 அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே இதைக் காண ரசிகர்கள் பலர் ஆவலாக இருக்கின்றனர்.
English Summary
IPL 2025 Two matches Chennai vs Rajasthan Delhi vs Hyderabad clash today