ஐபிஎல் மெகா ஏலம் இன்று தொடக்கம்.. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும். நாளையும் நடைபெறுகிறது. 

ஐபிஎல் போட்டியில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 229 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளி நாட்டைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த - 47 வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் - 34 வீரர்கள், தென் ஆப்பிரிக்கா-33 வீரர்கள், இங்கிலாந்தில் - 24 வீரர்கள், நியூசிலாந்து - 24 வீரர்கள், இலங்கை 23 வீரர்கள் இந்த ஏலம் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

வீரர்களுக்கு ரூ. 20 லட்சம் முதல் 2 கோடி வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகையில் இருந்து இவர்களுக்கான ஏலம் தொடங்கும். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 90 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் தக்கவைத்த வீரர்களுக்கு  ஊதியம் போக மீத தொகையை கொண்டு ஏலத்தில் மற்றவர்களை ஏலம் எடுக்க முடியும். முதல் நாளில் 161 வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். ஏலத்தை இங்கிலாந்தை சோ்ந்த ஹியூக் எட்மீட்ஸ் நடத்துகிறார். பகல் 12 மணிக்கு தொடங்கும்  ஏலம் நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL auction starts today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->