சென்னை அணியின் தோல்விக்கு வழி வகுத்த எம்எஸ் தோனி! போட்டுடைத்த தமிழக வீரர்!
IPL CSK vs RCB MS Dhoni 110m six
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு எம்எஸ் தோனியின் கடைசி சிக்சர் தான் காரணம் என்று, பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி - டு பிளேசிஸ் நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர்.
இதில் கோலி 47 ரன்னுக்கும், டு பிளேசிஸ் 54 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ராஜட் படிக்கர் 41 ரன்னுக்கும், கீரின் 36 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து, 218 ரன்கள் சேர்த்து.
இதனையடுத்து 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் செல்லலாம் என்ற வாய்ப்புடன் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த மிட்செல் 4 ரன்னில் அவுட் ஆக, சிறப்பாக ஆடிய ரச்சின் ரவிந்தரா 61 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரகானே 33 ரன்னிலும், துபே 7 ரன்னிலும், மிட்செல் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தோனி, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலைக்கு வந்தது.
தோனி கடைசி ஓவரின் முதல் பந்தில் 110 மீட்டர் சிக்சரை மைதானத்தை விட்டு பறக்க விட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்க, அடுத்த பந்திலேயே சிக்சர் அடிக்க முயன்று அவுட் ஆனார்.
இறுதியில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்ட முடியாமல் தோலிவியடைந்ததுடன் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், வெற்றி குறித்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தெரிவிக்கையில், "சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமாக நிகழ்ந்த விஷயம் தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸர் தான்.
காரணம் அந்த பந்து மைதானத்துக்கு வெளியே போனது, அதனால் தான் புதிய பந்து கிடைத்து, பந்துவீச சுலபமாக அமைய, அது எங்களின் வெற்றியை எளிதாக்கியது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
IPL CSK vs RCB MS Dhoni 110m six