IPL2022 : ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்.? குஜராத் ராஜஸ்தான் அணிகள் மோதல்.! - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் மற்றும் பிளே ஆப் சுற்றில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப்போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்கு முன் 2008ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் கோப்பையை வெல்ல இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் என்ற போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிச்சுற்று ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL final rajasthan royals vs Gujarat Titans


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->