மும்பை ரசிகர்கள் ஷாக் : மும்பை அணியின் மோசமான சாதனை!!
Ipl history Mumbai team poor record
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றது. இதுவரை கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணி மற்றும் ஹைதராபாத் அணி ஆகியவை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி. குஜராத் அணியின் கேப்டன் ஹாட்ரிக் பாண்டியாவை ஏலத்தில் வாங்கியது. பின்னர் ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பதவியை ஹாட்ரிக் பாண்டியாவிடம் வழங்கியது மும்பை அணி நிர்வாகம். தொடரின் தொடக்கம் முதலே தொடர் தோல்வியை சந்தித்தது ஹாட்ரிக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி. இதற்கு அணி வீரர்களிடையும் நிர்வாகத்திற்கு கருத்து வேறுபாடுகளை காரணம் என்று பலர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 4 வெற்றியும் 10தோல்வியும் பெற்று புள்ளிபட்டியலில் 10வது இடத்தில் இருந்து போட்டியில் இருந்து வெளியேறியது. இதன் மூலம் மும்பை எனி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 2 முறை பத்தாவது இடத்தில் புள்ளி பட்டியலில் நிறைவு செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 2022 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் 10 போட்டிகளில் தோற்று லீக் போட்டியில் இருந்து நடை கட்டியது. அதேபோன்று 2024 ஆண்டு ஹாட்ரிக் பாண்டியா தலைமையிலும் அதேபோன்று நடந்துள்ளது.
English Summary
Ipl history Mumbai team poor record