மீண்டும் தோனியின் சாதனை தகர்ப்பு! அன்று ரிஷாப், இன்று இஷான் கிஷான்!  - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்த இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய இஷான் கிஷன் 34 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டர்களும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களின் அதிவேக அரைசதம் விளாசிய  வீரக்கல் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் இஷான் கிஷன்.

முன்னதாக 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி 34 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார். 

மகேந்திர சிங் தோனியின் இந்த சாதனையை 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்  28 பந்துகளில் அரைசதம் அடித்து தகர்த்தெறிந்தார்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனியின் சாதனையை 33 பந்துகளில் அரைசதம் அடித்து இஷான் கிஷன் தகர்த்தெறிந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ishan kishan fastest test cricket half century IND vs WI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->