டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. கே.எல் ராகுல் இடத்தில் இஷான் கிஷன்..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கே.எல் ராகுல் காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் கே.எல் ராகுல் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக யார் என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணியின் முக்கிய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறினார். இதனால் இந்திய அணியின் டெஸ்ட் மிடில் ஆர்டரில் சிக்கலை ஏற்படுத்தியது.

கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியின் லெவன் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இஷான் கமிஷன் 48 முதல் தர போட்டிகளில் விளையாடி 2,985 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் லண்டனில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishan Kishan replaces KR Rahul in Test Championship match against Australia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->