கனத்த மனதுடன் இந்த பெரிய முடிவை எடுத்தேன்.. ஓய்வு அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் உருக்கம்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷி தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு டி20 & ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

 ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரிஷி தவான். தற்போது  34 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறாமல் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ளார்.உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆல்ரவுண்டராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் ( 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டி) விளையாடியுள்ளார்.

இருப்பினும் அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்படாததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை. உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் மட்டுமே விளையாடி வந்தார்.

சர்வதேச அளவில் ஓய்வை அறிவித்த போதிலும், ரிஷி தவான் முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் இமாச்சல பிரதேச அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ரிஷி தவான் தனது ஓய்வை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். கனத்த மனதுடன் இந்த பெரிய முடிவை எடுத்துள்ளதாகவும் ஆனால் எந்த வருத்தமும் இல்லை என்றும்  தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It was with a heavy heart that I took this big decision Indian cricketer announces retirement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->