ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய அணி தங்கம் வென்று அசத்தல்!
Junior world shooting indian team wins gold and is amazing
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த போட்டியின் கடைசி நாளில் நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் தீபக் தலால் மற்றும் கமல்ஜீத் , ராஜ் சந்திரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,616 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது.
இதில், தனிநபர் பிரிவில் இந்திய வீரர் முகேஷ் 548 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றிய நிலையில், பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பரிஷா குப்தா 540 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், இந்த போட்டியில் இந்தியா 13 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்ற நிலையில், இத்தாலி 5 தங்கம், 4 வெள்ளி உள்ளிட்ட 13 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் போட்டிகளில் அதிகபட்ச பதக்கங்களில் அஜர்பைஜான் அணி வெள்ளிப்பதக்கமும், அர்மேனியா வெண்கலப்பதக்கமும் வென்றது.
English Summary
Junior world shooting indian team wins gold and is amazing