உலக சாதனை படைத்தும், அணியில் இடம் பிடிக்காத கருண் நாயர்; கடுப்பில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சமீபத்தில் உலக சாதனை செய்த கருண் நாயருக்கு இடம் அளிக்காதது குறித்து ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனமுடைந்து இருந்தார்.

அத்துடன், 2022 ஆம் ஆண்டு "கிரிக்கெட்டே.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடு" என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி இருந்த அவர், 30 வயதை கடந்து விட்ட நிலையிலும் உள்ளூர் போட்டிகளில் உச்சம் தொட்டவராக இருக்கிறார்.

2025 விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரில் அவர் அதிரடியாக ஆடி 07 இன்னிங்ஸ்களில் 752 ரன்களை குவித்து சாதனை படைத்திருந்தார். அந்த 07 இன்னிங்ஸ்களில் அவர் ஆறு முறை நாட் அவுட் ஆக இருந்து வியப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனால் அவரது பேட்டிங் சராசரி 752 என்பதாக இருக்கிறது. இப்படி ஒரு சாதனையை எந்த ஒருநாள் தொடரிலும், எந்த வீரரும் செய்ததே இல்லை. ஆனால்,  இந்திய அணியின் தேர்வுக் குழு அதற்கு மாறான முடிவை எடுத்து இருக்கிறது. 

2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் இடம் பெற்ற அணியில் நான்கு வீரர்களை மட்டும் மாற்றி விட்டு கிட்டத்தட்ட அதே அணியை மீண்டும் அறிவித்து இருக்கிறது தேர்வுக் குழு. அத்துடன் சஞ்சு சாம்சனுமும் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

அசாதாரண சாதனை செய்த கருண் நாயரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், "752 ரன் என்ற பேட்டிங் சராசரி வைத்திருந்தாலும் அவருக்கு இந்த அணியில் இடம் அளிக்க முடியாது." எனக் கூறினார். இது ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karun Nair who set a world record but was not included in the team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->