வரலாற்றில் முதல் முறையாக.. ஆடவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நின்ற முதல் பெண் நடுவர்..!.
Kim Cotton first female umpire between 2 ICC full member
இரண்டு ஐசிசி முழு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டியில் ஆண் நடுவர்களே இதுவரை செயல்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக பெண் நடுவர் சர்வதேச ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றுள்ளார். இலங்கை அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான ஆடவர் டி20 போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்ற சாதனைப் புத்தகத்தில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிம் காட்டன் பதிவு செய்துள்ளார்.
டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் நடுவராக பணியாற்ற நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த வெய்ன் நைட்ஸுடன் கிம் காட்டன் களம் இறங்கினார். இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை சேர்த்தது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kim Cotton first female umpire between 2 ICC full member