13.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி.. தோல்விக்கான காரணத்தை கூறிய பேட் கம்மின்ஸ்!!
Kkr team won the match go to finals
13.4 ஓவர்களில் இலக்கை எட்டி நான்காவது முறையாக இறுதிப்போட்டுக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்து, கொல்கத்தா அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் அணி உள்ளிட்ட நான்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று இரவு நடைபெற்ற முதல் தகுதி சுற்றி போட்டியில் கொல்கத்தா அணியும் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட்கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டகர்கள் சிறப்பான முறையில் விளையாடிய ரன்களை குவித்தனர்.
பத்து ஓவர்கள் கடந்த நிலையில், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஹைதராபாத் அணியர்கள் விக்கெட்டைளை விடத் தொடங்கினர். இறுதியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி 159 ரன்களை குவித்தது.
போட்டியின் இரண்டாம் பாதியில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்து வெற்றி பெற்று நான்காவது இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
தோல்வி குறித்துப் பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்த நாளை மறக்க முயல்வோம். பேட்டிங்கில் நினைத்த அளவில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை அதனால் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. தகுதி சுற்று இரண்டு என்ற வாய்ப்பு எங்களுக்கு இருப்பது நல்ல விஷயம் என்று கூறினார்.
English Summary
Kkr team won the match go to finals