இன்றைய போட்டியில் உலக சாதனை படைக்கவுள்ள விராட் கோலி.!!
kohli new world record today match
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. தென் ஆப்பிரிக்காவின் கோட்டையாக செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இந்தியாவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அங்கு நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை டிராவை சந்தித்து உள்ளது.
இந்த மைதானத்தில் விராட் கோலி இரண்டு போட்டிகளில் விளையாடி 310 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும். இந்த பிட்ச் கோலிக்கு ஏற்ற வகையில் இருப்பதால், இந்த வருடத்தின் முதல் சதத்தை அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜோகனஸ்பர்க் மைதானத்தில் விராட் கோலி 310 அடுத்து அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரிட் 316 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 7 ரன்கள் மட்டுமே தேவை. இந்த ரன்னை அடித்துவிட்டால் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார்.
English Summary
kohli new world record today match