கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி! காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.! - Seithipunal
Seithipunal


கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தென்கொரியாவின் சன்சியான் நகரில் உள்ள பால்ம ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியாவின் லக்ஷயா சென், எச்.எஸ். பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி. சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி .வி சிந்து அமெரிக்காவின் லாரன் லாமை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15 ,21-14 செட் கணக்கில் பி.வி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசியாவின் டேரன் லியூவை 22-20, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

அண்மையில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து, ஜப்பானின் அயா ஓஹோரியை சந்திக்கிறார், அதே நேரத்தில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐந்தாவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் மிஷா சில்பர்மேனை எதிர்கொள்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Korea open badminton PVSindu won


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->