உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இணைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்.. யார் யார் தெரியுமா.?
Kuldeep sen and umran Malik added T20 World Cup net bowlers
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வலைப்பயிற்சி வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூகா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு பட்டியல் வீரர்கள் : முகம்மது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர்.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வெறப்பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இன்னும் விலகவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வலைப்பயிற்சி வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அதன்படி, இளம் பேகப்பந்து வீச்சாளர்களான உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் சென் மற்றும் மேலும் சில சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சார்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Kuldeep sen and umran Malik added T20 World Cup net bowlers