திக் திக் நிமிடம், திரில் வெற்றி; அசுதோஷ் சர்மாவின் அதிரடி; ஆட்டம் கண்ட டெல்லி அணி..!
Lucknow team defeated Delhi and won
ஐபிஎல் சீசன் 2025-இன் 04-வது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங்கில் இறங்கியது. அணி சார்பாக மார்கிராம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரம்பத்தில் அதிரடி காட்டி வந்த லக்னோ அணி. ஆட்டத்தின் பாதியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிய தொடங்கிய நிலையில், லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 08 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்தது இருந்தது.

தையடுத்து 210 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் ஆரம்பத்திலே தடுமாறினர். குறிப்பாக மெக்கர்க் 01 ரன்னிலும், சமீர் ரிஸ்வி 04 ரன்களிலும், அக்சர் படேல் 22 ரன்களிலும், டு பிளெசிஸ் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிறகு வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களில் வெறியேறினார். விப்ராஜ் நீகம் முதல் ஐபிஎல் போட்டியில் 39 ரன்களை எடுத்து அசத்தினார். அசுதோஷ் ராம்பாபு சர்மா 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்று ருத்ரதாண்டவம் ஆடினார். இறுதியில் டெல்லி அணி 19.3 ஓவர் முடிவில் 09 விக்கெட்டுக்கு இழந்து 211 ரன்கள் எடுத்து திரில் வெற்றிப்பெற்றது.
English Summary
Lucknow team defeated Delhi and won