நடுவானில் மோதி வெடித்து சிதறிய இரண்டு போர் விமானங்கள் வெளியான அதிர்ச்சி வீடியோ..!
Shocking video of two fighter jets colliding and exploding in mid air in France has been released
பிரான்ஸ் விமானப்படையின் ஜெட் ரக விமானங்கள் இரண்டு நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் பயிற்சியின்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே பயிற்சியின்போது பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.
இந்நிலையில், மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பியுள்ளனர். அத்துடன், அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டடுள்ளது. எனினும் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறித்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதா பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Shocking video of two fighter jets colliding and exploding in mid air in France has been released