அஜித்தின் 'குட் பேட் அக்லி' தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும்; தயாரிப்பாளர் ரவி சங்கர்..!
Good Bad Ugly will create a huge record in Tamil cinema Producer Ravi Shankar
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி. ' இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதனை தொடர்ந்து 'ஓஜி சம்பவம்' என்ற பாடல் வெளியாகி படும் வைரலானது. இந்நிலையில் அடுத்ததாக 02-வது பாடலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், "குட் பேட் அக்லி என்பது தமிழில் இருந்து மிகவும் பரபரப்பான படம்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் முதல் நாளில் வசூலித்ததை விட 'குட் பேட் அக்லி' அதிக வசூல் செய்து சாதனை படைக்கும். இது என்னுடைய வார்த்தைகள் அல்ல தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்களின் வார்த்தை" என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Good Bad Ugly will create a huge record in Tamil cinema Producer Ravi Shankar