அதிரடி ஆட்டக்கார அணி ஐதராபாத்தை, அடித்து துவைத்த லக்னோ அணி..!
Lucknow team defeated Hyderabad team and won
18 வது சீசன் ஐபிஎல் 2025 தொடரின் 07-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சு முதலில் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 09 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 05 பவுண்டரி, 03 சிக்சருடன் 47 ரன்களை எடுத்தார். அதனை தொடர்ந்து, அனிகெட் வர்மா 36 ரன்னும், நிதிஷ் ரெட்டி 32 ரன்னும், கிளாசன் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 300 ரன்களை தொடுவார்கள் என கணிப்பு இருந்த நிலையில், 190 ரன்களில் ஐதராபாத் அணி சொந்த மைதானத்தில் சுருண்டமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 01 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து, மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. நிகோலஸ் பூரன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி, 26 பந்துகளில் 06 சிக்சர், 06 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்னில் வெளியேற, கடைசியில் இறங்கிய அப்துல் சமத் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.1 ஓவரில் 05 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
English Summary
Lucknow team defeated Hyderabad team and won