ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியனை தோற்கடித்து சாம்பியன் வென்ற மடிசன் கீஸ்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.  இந்த  ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் 'நம்பர்-01' வீராங்கனை, 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மடிசன் கீசை ('நம்பர்-14') எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை மடிசன் கீஸ்,06- 03 என வென்றார்.

ஆனால், இரண்டாவது செட்டை சபலென்கா 02-06 என இழந்தார். எதிர்முனையில் கடுமையாக போராடிய மடிசன் கீஸ் 03வது செட்டை 07-05 என தன் வசப்படுத்தினார். 

போட்டி முடிவில் மடிசன் கீஸ் 06-03, 02-06,07-05 என்ற செட் கணக்கில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய, ஓபன் கோப்பையை கைப்பற்றிய சபலென்கா, 03வது முறையாக அதனை கைப்பற்ற கடுமையாக முயற்சித்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியடைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madison Keys wins Australian Open tennis championship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->