டிஎன்பிஎல் தொடருக்கு, டக்கராக தயாராகும் மதுரை பேந்தர்ஸ்! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்டின் ஏழாவது சீசன் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகளை கொண்டு ஜீன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. 

இந்த சீசனுக்காக மதுரை பேந்தர்ஸ் அணியினர் கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் போன்ற சிறந்த தமிழக வீரர்களை அடையாளம் காண டிஎன்பிஎல் தொடர் அமைந்துள்ளது.

டிஎன்பிஎல் மாநில அளவிலான போட்டியாக உள்ளது. மேலும் இம்பேக்ட் விதிமுறையின் மூலம் கூடுதலாக ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

மதுரை பேந்தர்ஸ் அணியின் சி.ஓ.ஓ மகேஷ் கூறுகையில், டிஎன்பிஎல் ஆனது வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு செல்லும் ஷார்ட்கட் எனலாம். ரஞ்சி கோப்பையில் 15 வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்கிறது, டிஎன்பிஎல் மூலம் 8 அணிகளில் சுமார் 160 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இதன்மூலம் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் அமைகிறது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai Panthers are gearing up for the TNPL series


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->