ஜீன்ஸ் அணிந்து வந்ததால் தகுதி நீக்கம்; செஸ் தொடரில் இருந்து விலகிய மேக்னஸ் கார்ல்சன்..! - Seithipunal
Seithipunal


உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக மேக்னஸ் கார்ல்சன் அறிவித்துள்ளார்.

உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்கா நியூயார்க்-இல்  நடந்து வருகிறது. 

இதில், நார்வேவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கலந்து கொண்டார். ரேபிட் பிரிவில் 2ஆம் நாள் போட்டிக்கு கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்தார். 

இது சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிமுறையை மீறும் செயல். விதிமுறைப்படி, வீரர்கள் போட்டியின் போது ஜீன்ஸ் அணியக் கூடாது. உடையை மாற்றும் படி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்திய பிறகும், அவர் கேட்கவில்லை.

 அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக FIDE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.,28) உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக கார்ல்சன் அறிவித்துள்ளார். 

இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 05 முறையும், பிளிட்ஸ் பிரிவில் 07 முறையும் வெற்றி  பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magnus Carlsen withdraws from the chess tournament


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->