மீண்டும் சிஎஸ்கே-வின் கேப்டனான மகேந்திரசிங் தோனி; நடப்பு சீசனிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்..?
Mahendra Singh Dhoni is the captain of CSK again
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 05 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி நடப்பு சீசனில் 05 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 09-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். அதிக தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணி ரசிகர்களுக்கு மேலும் இது அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில், அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு எல்லோரும் எதிர் பார்த்த அந்த சந்தோசமான செய்தி கிடைத்துள்ளது. 05 முறை சாம்பியன் பெற்று தந்ததோடு, அதிக முறை பிளே -ஆப் செல்ல காரணமாக இருந்த முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அறிவித்துள்ளார். நாளை நடைபெற உள்ள கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலிருந்து தோனி கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்த முடிவு சி.எஸ்.கே அணிக்கு நிச்சயம் வலுவானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் சென்னை அணி தோனி தலைமையிலேயே 05 கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும் இவரது தலைமையில் வெற்றிகரமாகவும் செயல்பட்டுள்ளது.
கடந்த சீசனில் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து விட்டு தோனி சாதாரண விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதுவும் அன் கேப்ட் பிளேயராக விளையாடி வருகிறார்.
English Summary
Mahendra Singh Dhoni is the captain of CSK again