இந்தியாவின் தங்க மகள்... சாதனை நாயகி என்று அழைக்கப்படுபவர்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தங்க மகள்:

நட்சத்திர வீராங்கனை என அழைக்கப்படுபவர்...

சாதனை நாயகி என்று அழைக்கப்படுபவர்...

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கப்பதக்கம் வென்றவர்...

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்...

உலக சாம்பியன்ஷிப்பில் எட்டு முறை பதக்கம் வென்ற ஒரே போட்டியாளர்...

அர்ஜுனா விருதை பெற்றவர்...

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை...

யார் இவர்?

இவர் தான்

மேரி கோம்

பிறப்பு : 

1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காதேய் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

பள்ளிக்குச் சென்று தடகளத்தை ஆரம்பத்தில் கற்று கொண்டார். பின்னர் குத்துச்சண்டையையும் அதே நேரத்தில் கற்று கொண்டார்.

இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின் தலைநகர் இம்பாலில் உள்ள பள்ளியில் மேற்படிப்பை தொடர்ந்தார். ஆனால், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேற முடியவில்லை.

பின்னர் விளையாட்டுதான் தன் வாழ்க்கை என்று மேரி கோம் தீர்மானித்தார்.

குடும்பம் :

தந்தை மாங்டே டோன்பா கோம் மற்றும் தாய் மாங்டே அகம் கோம் ஆவார். இவருக்கு ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.

திருமணம் : 

2005ஆம் ஆண்டு கால்பந்தாட்ட வீரர் கருங் ஓன்கோலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுங்தாங்லென் கோம், குப்னிவர் கோம், ரெச்சுங்வர் கோம் என மூன்று மகன்கள் உள்ளனர்.

மூன்று மகன்கள் மட்டுமல்லாமல் 2018ஆம் ஆண்டு, மேரி கோமும் அவரது கணவரும் மெரிலின் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தனர்.

சாதனைகள் : 

இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியா வீராங்கனை ஆவார்.

2012ஆம் ஆண்டு லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார்.

2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவா-வை வீழ்த்தி தங்கப்பதக்கம் பெற்றார்.

பின்னர் அதே ஆண்டில் சீனாவில் நடந்த யுஐடீயு மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் நான்காவது தங்கப்பதக்கத்தை வென்றார்.

2011ஆம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய மகளிர் கோப்பையில் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

விருதுகள்: 

2004ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2009ஆம் ஆண்டு ராஜுவ்காந்தி கேல் ரத்னா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 2013ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mary Com History


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->