சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த குட்டி மலிங்கா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பவர் பிளேவில் பலமாக கருதப்பட்ட தீபக் சாஹர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இது சென்னை அணிக்கு பின்னடைவாக உள்ளது. இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார். ஆடம் மில்னே விலகியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ஆனால், அவரை ஈடுகட்டும் வகையில் அவருக்கு மாற்றாக தரமான பவுலரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அன்மையில் வெஸ்ட் இண்டீஸ்-யில் நடந்த முடிந்த ஜூனியர் உலகக் கோப்பையின் இலங்கை அணியில் இடம் பிடித்து அருமையாகப் பந்துவீசி 4 போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பதிரனாவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா போன்ற பந்து வீசுகிறார். அவர் பந்து வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Matheesha Pathirana Join CSK Team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->