டி20 உலகக் கோப்பை : இந்திய அணியின் முக்கிய வீர களமிறங்கமாட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


 
15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் முன்னேறியுள்ளது. 

இந்த நிலையில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்தும் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள ஜடேஜாவின் உடல்நிலை சீராக சில நாட்கள் ஆகும் என்பதால், அவர் டி20 உலகக் கோப்பையில் களமிறங்குவது கடினம் என்றும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be Ravindra Jadeja set to be ruled out of T20 World Cup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->