இறுதி போட்டிக்கு அழைத்து செல்வாரா கிடாம்பி ஸ்ரீகாந்த்! அனல் பறக்கும் பேட்மிண்டன் போட்டி!  - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் பேட்மிட்டன்  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியானது தென்கொரியா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. மிகவும் சவாலான இந்த ஆட்டத்தில் இந்தியாவும் தென்கொரியாவும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.

இந்தியா ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும், இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் தென்கோரிய அணி வீரர்களும் வெற்றி பெற்று, ஆட்டம் இரண்டுக்கு இரண்டு என்ற சமநிலை வகிக்கிறது. 

இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை முடிவு செய்யும் இறுதி ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தென்கொரிய வீரரை எதிர் கொண்டு விளையாடி வருகிறார். இதில் முதல் செட்டை கிடாம்பி ஸ்ரீகாந்த் இழந்துவிட்ட நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது செட்டை இவர் வெற்றி பெற்று அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் எகிறி இருக்கிறது. 

லக்ஷயா சென், பிரணாய் தங்களது ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு இரண்டு புள்ளிகளை பெற்றுக் கொடுத்தனர். அதேபோல இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராஜ் சாத்விக் இணையும், அர்ஜுன் துருவ் இணையும், தோல்வியடைந்ததால் தென்கொரியா அணி 2 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

தற்பொழுது இறுதிப் போட்டிக்கு செல்வது யார் என்பதை முடிவு செய்யும் ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடி வருகிறார். அவர் உலகத் தரவரிசையில் 163 வது இடத்தில் இருக்கும் வீரரை எதிர்கொள்வதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21 வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்துக்கு கடுமையான சவால் கொடுத்து விளையாடுகிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men team badminton semis decider match india vs south korea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->