இந்தியா - வங்கதேச ஒருநாள் தொடர் நாளை தொடக்கம்.. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்.!
Mohammad shami ruled out Bangladesh oneday international series
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில், முதல் ஒரு நாள் போட்டி நாளை காலை 11.30 மணிக்கு டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ;
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ, ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
English Summary
Mohammad shami ruled out Bangladesh oneday international series