அந்த புகைப்படங்கள் இதயத்தை நொறுக்கி விட்டன.. கிரிக்கெட் வீரர் உருக்கம்.!
Mohammad siraj about turkey earthquake
துருக்கி-சிரியா எல்லையில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியெண்டெட் மாகாணம் நுர்தாகி நகரில் அதிகாலை 4:17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படிமாலை 3:54 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக மீண்டும் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மத்திய துருக்கியில் மீண்டும் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் துருக்கியில் மட்டும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் மீண்டும் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி வேதனை தெரிவித்துள்ள இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ், தனது சமூக வலைதள பக்கத்தில், "சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் புகைப்படங்கள் எனது இதயத்தை நொறுங்க செய்துள்ளது. அங்கிருக்கும் அனைத்து குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Mohammad siraj about turkey earthquake