ஐசிசி ஒருநாள் பவுலிங் தரவரிசை.. இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வருகிறார். இதனால் இந்திய அணிக்கு சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வந்த முகமது சிராஜ் பும்ராவின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

அதன்படி கடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் சிறப்பாக வீசினார். இதில் இலங்கை அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 9 விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய வீரர் முகமது சிராஜ் 729 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammad Siraj no 1 ODI bowler


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->