விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய முகமது ஷமி.. இப்படி ஒரு சாதனையா..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 1-0 என முன்னிலை வகிக்கிறது

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 25 சிக்ஸர்கள் அடித்து விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.

இதுவரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 24 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து ரவி சாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 22 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கும் கே.எல் ராகுல் இதுவரை 17 சிக்ஸர்களை மட்டுமே அடித்துள்ளார்.

முகமது ஷமி இன்று 125வது ஓவரில் இந்த போட்டியில் தனது முதல் சிக்சரை அடித்தார். அதே போன்று 131வது ஓவரையிலும் மற்றொரு சிக்ஸரை அடித்தார். இதன் மூலம் அதிக சிக்சர் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி பின்னுக்குத் தள்ளி முகமது ஷமி முன்னேறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammed Shami pushed back Virat Kohli in hitting more sixes in test cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->