மறக்க முடியுமா இந்த நாளை? ரசிகர்களை வச்சு செய்த தோனி!
ms dhoni retirement on this day history
கிரிக்கெட் உலகில் மகத்தான ஒரு கேப்டன், மின்னல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், சிறந்த மேட்ச் ஃபினிஷர், கேப்டன் கூல் என ரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் போற்றப்படக்கூடிய, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தனது ஓய்வை அறிவித்த நாள் இன்று.
கடந்த 2020ஆம் ஆண்டு, இதே நாளில் தான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து, தான் ஓய்வு பெறவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்திருந்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி செய்த ஒவ்வொரு சம்பவங்களும், சிறப்பு வாய்ந்தது, கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என 538 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ள மகேந்திர சிங் தோனி, 17,266 ரன்களையும் குவித்துள்ளார்.
மேலும், மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி 2007 ஐசிசி t20 உலக கோப்பை தொடர், 2011 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர், 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விளையாடியது தான், மகேந்திர சிங் தோனி கடைசியாக ஆடிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இந்த ரன் அவுட் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியது மட்டுமல்லாமல், தோனியின் கடைசி ஆட்டம் என்பதால் இன்றுவரை அந்த ஆட்டம் அடிக்கடி நினைவு கூறப்படுகிறது.
தோனி சரியாக 2020 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வல்லுனர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு சிலர் தோனி ஓய்வு பெறும் முடிவிலிருந்து பின்வாங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். மற்றும் சிலர் தோனி சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார். எப்போதும் அவர் சரியான முடிவை தான் எடுப்பார் என்று, அவரின் முடிவை வரவேற்று, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மகேந்திர சிங் தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான், தனது இந்த ஓய்வு முடிவை அறிவித்தார்.
அவரின் அந்த பதிவில், "உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மணி இப்போது 7. 29 ஆகிறது. நான் இப்போது முதல் ஓய்வு பெற்று விட்டதாக கருத்தில் கொள்ளுங்கள்" என்று மகேந்திர சிங் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தாலும். மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பாரோ என்ற அச்சத்திலேயே ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.
இதன் காரணமாக அவர் களமிறங்கும் போதும் எல்லாம், அவரின் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
ஐபிஎல் ஓய்வு குறித்து தோனி தெரிவிக்கையில், ''கடைசியாக அவர் விளையாட உள்ள கிரிக்கெட் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அரங்கேறும்'' என்று தெரிவித்து உள்ளார்.
English Summary
ms dhoni retirement on this day history