#IPL : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை அணி.. பஞ்சாப் அணி பேட்டிங்.!
Mumbai Indians won the toss choose to bowl in Punjab kings
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல் 4 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்றைய தினம் கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் களம் இறங்குகிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை இன்று பதிவு செய்யுமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அணி விபரம் ;
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:
மயங்க் அகர்வால், ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ஒடியன் ஸ்மித், ஷாருக்கான், ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்
English Summary
Mumbai Indians won the toss choose to bowl in Punjab kings