தேசிய விளையாட்டு விருதுகள் : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார்.! - Seithipunal
Seithipunal


விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து  இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.

இதில், தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

விருது பெறுபவர்கள் முழு விபரம்

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ;

அச்சந்தா சரத் கமல் ( டேபிள் டென்னிஸ்)

அர்ஜூனா விருது பெறுபவர்கள் ;

சீமா புனியா ( தடகளம்)
எல்தோஸ் பால் (தடகளம்)
அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்)
லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்)
பிரணாய் (பேட்மிண்டன்)
அமித் (குத்துச்சண்டை)
நிகத் ஜரீன் (குத்துச்சண்டை)
பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்)
பிரக்ஞானந்தா (செஸ்)
டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி)
சுஷிலா தேவி (ஜூடோ)
சாக்ஷி குமாரி (கபடி)
நயன் மோனி சைகியா (லாவ்ன் பவ்ல்)
சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்) இளவேனில் (துப்பாக்கி சுடுதல்)
ஓம்பிரகாஷ் மிதர்வா (துப்பாக்கி சுடுதல்)
ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்) விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்) அன்ஷு (மல்யுத்தம்)
சரிதா (மல்யுத்தம்)
பர்வீன் (மல்யுத்தம்)
மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி (பாரா பேட்மிண்டன்)
தருண் தில்லான் (பாரா பேட்மிண்டன்)
ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல்)
ஜெர்லின் அனிகா (பாரா பேட்மிண்டன்)

துரோணாச்சார்யா விருது பெறுபவர்கள் ;

ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை)
முகமது அலி கமர் (குத்துச்சண்டை)
சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்)
சுஜீத் மான் (மல்யுத்தம்)

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது பெறுபவர்கள் ;

அஸ்வினி அக்குஞ்சி சி (தடகளம்)
தரம்வீர் சிங் (ஹாக்கி)
பி சி சுரேஷ் (கபடி)
நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Sports Awards President Draupadi Murmu presents today!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->