"லாரஸ்" விருதுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை!!! - Seithipunal
Seithipunal


விளையாட்டுத் துறையில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதான "லாரஸ்" (Laureus) விருக்கு ஈட்டி எறிதல் வீரர் நுரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொனாகோ நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான லாரஸ் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது விளையாட்டிற்கான ஆஸ்கர் விருது என்றும் அழைக்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில், தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கள் வென்று தந்த நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகின் திருப்பு முனையை ஏற்படுத்திய வீரர் என்ற அடிப்படையில் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் விரர் சிமோன் பைல்ஸ், இங்கிலாந்து டென்னிஸ் வீரர் எம்மா ரடுகானு உட்பட மொத்தம் 6 வீரர்கள் இந்த லாரஸ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.  

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு நிறுவனங்கள் உட்பட 1300 பேர் இணைந்து சிறந்த வீரர் வீராங்கனைகளை 7 பிரிவுகளில் தேர்வு செய்ய உள்ளனர். இறுதி முடிவு வரும் ஏப்ரம் மாதம் வெளியிடப்படும். அப்போது இந்தியா சார்பில் ஈட்டி எறிதலில் உலக சாதனை புரிந்த நீரஜ் சோப்ரா இந்த விருதை பெறுவார் என இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். 

இந்த விருதை அதிகபட்சமாக சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4 முறை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஸ்பெயினின் ரபேல் நடால் வென்றார். இந்தியா சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்றதையடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neeraj Chopra nominated for Laureus sports award


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->