T20 வரலாற்றை திருப்பி போட்ட ஆட்டம்! 300 ரன்கள், 9 பந்துகளில் அரை சதம்! யுவராஜ், ரோகித் சாதனைகள் தகர்ப்பு!  - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் போட்டியானது இன்று முதல் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நேபாள் அணி மங்கோலியா அணியை சந்தித்தது. டாஸ் வென்ற மங்கோலியா அணி நேபால் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கௌஷால் மல்லா அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் 12 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்தார். 34 பந்துகளில் சதத்தை எடுத்த அவர், T20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் சாதனையை தகர்த்தார்.

அதன் பிறகு திபேந்தர் சிங் 9 பந்துகளில் அரை சதம் அடித்து, T20 சர்வதேச போட்டிகளில் 12 பந்துகளில் அரை சதம் அடித்த இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனையை தகர்த்து இருக்கிறார். அவர் 10 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார். 

எல்லாவற்றிற்கும் உச்சபட்சமாக 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் நேபாள் அணி முதல் முறையாக 300 ரன்கள் கடந்த அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைக் குவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal create multiple records in T20 match History at Asian games against magnolia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->