ஆஸ்திரேலியா அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
New Zealand set a target of 201 runs for Australia
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தது. இன்று முதல் சூப்பர்-12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பம் ஆகின்றன. முதல் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணியை சிட்னி மைதானத்தில் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை எடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தார். நியூசிலாந்த அணி 4.1 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆலன் ஆஸ்திரேலியா வீரர் அசில்வுட் பந்தில் அவுட் ஆனார். இதனை அடுத்து களம் இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 23 எடுத்து இருந்தபோது அவுட் ஆனார்.
எதிர்முனையில் விளையாடிய டேவொன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து வீரர் ஜிம்மின் நீசம் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அசில் ரோடு 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெடுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரல்களை எடுத்தது. இதனால் 201 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.
English Summary
New Zealand set a target of 201 runs for Australia