T 20 கிரிக்கட் தொடரில் இலங்கையை வென்ற நியூஸிலாந்து அணி..!
New Zealand won the T20 cricket series against Sri Lanka
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான T20 கிரிக்கட்டின் இரண்டாம் நாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி நியூஸிலாந்து அணி 03 போட்டிகளை கொண்ட T 20 கிரிக்கட் தொடரை 2க்கு0 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்களை பெற்றது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 141 ரன்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதன்படி நியூஸிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் 45 ரன்கள் அதிகம் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T 20ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 08 ரன்களால் வெற்றி பெற்றிருந்தது.
English Summary
New Zealand won the T20 cricket series against Sri Lanka