நியூஸிலாந்து பவுலர்களுக்கு தண்ணி காட்டும் மயங்க் அகர்வால்.!!
nid vs nz 2nd test 2 day
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. மைதானத்தில் பவுண்டரி கோடுகள் அருகே ஈரப்பதம் இருந்ததால் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 11:30 மணிக்கு தாமதமாக தொடங்கியது.
இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். ஷுப்மான் கில் 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து புஜாரா, விராட் கோலி ஆகியோர் டக் அவுட்டில் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு அகர்வாலுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மயங்க் அகர்வால் 119 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு அகர்வாலுடன் சகா ஜோடி சேர்ந்தார். மீண்டும் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது அரைசதத்தை சதமாக மாற்றினார். இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 221 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது, சகா 27-க்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு மயங்கி அகர்வாலுடன் அக்சார் பட்டேல் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மயங்க் அகர்வால் தற்போது 146 ரன்கள் எடுத்துள்ளார். அக்சார் பட்டேல் 32 ரன்கள் எடுத்துள்ளார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி சேர்ப்பில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.