சர்வதேச போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த நிதிஷ்குமார் ரெட்டி..! - Seithipunal
Seithipunal


​இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ்குமார் ரெட்டி அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு நிதிஷ் பதிவு செய்துள்ளார். இதன்போது,  மைதானத்தில் இருந்த நிதீஷ்குமார் ரெட்டியின் அப்பா கண்ணீர் விட்டு அழுது அன்பினை வெளிப்படுத்தியுளார்.

100 ரன்களை அடித்த பிறகு நிதீஷ்குமார் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.  இந்த சதம் மூலம் அவர்  சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

8வது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும்,சாதனையம் நிதிஷ்  வசமாகியுள்ளது. 

அடுத்ததாக, இந்திய அணிக்காக மிக இளம் வயதில் சதமடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர், இரண்டாவது இடத்தில் ரிஷப் பந்த் இருக்கின்றனர்.


இவருக்கு பக்கபலமாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடினார். அவரும் அரைசதம் அடித்தார். பின்னர் மழை குறுக்கிட்டு போட்டி மீண்டும் தொடங்கியபோது 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார் வாஷிங்டன்.

நிதீஷ்குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் இருவரும் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நிதீஷ் குமார் ரெட்டி - வாஷிங்டன் சுந்தர் அமைத்த பார்ட்னர்ஷிப் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க உதவியது.

இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் ஸ்டீவ் ஸிமித் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் எடுத்தார். 

இந்திய அணியைப் பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோகித், தொடர்ந்து மிக மோசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஜெய்ஷ்வால் அற்புதமாக விளையாடி 82 ரன்கள் குவித்தார்.

முதல் இன்னிங்ஸ் லீட் ஆஸ்திரேலியா வசம் இருப்பதால் போட்டியில்  ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பு  கூடுதலாக வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nitish Kumar Reddy scores his first century in international cricket


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->