ஒலிம்பிக்ஸ் 2028-ல் கிரிக்கெட்: 6 அணிகளுக்கு மட்டுமே அனுமதி! முக்கிய அப்டேட்!
Olympic 2028 T20 Cricket ICC
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் திரும்ப வந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
ஆனால், இந்த முறை ஒலிம்பிக்கில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் தலா 6 அணிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஐசிசியின் முழு உறுப்பினர் அணிகள் 12 இருக்கும்போதிலும், அதில் பாதி அணிகளுக்கு மட்டுமே இடம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அதாவது, மொத்தம் 90 வீரர்கள் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் பங்கேற்க வாய்ப்பு பெற இருக்கிறார்கள்.
மேலும், ஒலிம்பிக் நடத்தும் அமெரிக்கா தானாகவே இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே, மீதமுள்ள 5 இடங்களை மட்டுமே பிற அணிகள் போட்டியிட்டு பெற முடியும்.
இந்த ஐந்து அணிகள் எப்படி தேர்வு செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா அணிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக, கிரிக்கெட் 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்றது. அப்போது அது இரு நாட்கள் நீடித்த ஒரு போட்டியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Olympic 2028 T20 Cricket ICC