ஒலிம்பிக் : பறிபோன வெள்ளிப் பதக்கம்......மெளனம் கலைத்த வினேஷ் போகத்....வைரலாகும் பதிவு - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  33-வது ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்றது. இதில் 
பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் கைவிரித்துவிட்ட நிலையில், வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி  வினேஷ் அளித்த மனுவையும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே 
ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக  வினேஷ் போகத்தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வினேஷ். தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கிறார். அந்த புகைப்பட பதிவின் கீழ் எந்த வார்த்தைகளையும்  பதிவிடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Olympics Lost Silver Medal Vinesh Bhogat who broke the silence the post is going viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->