வெறும் 23 வயதில் 236 விக்கெட்! கிரிக்கெட் உலகை அதிர வைக்கும் வீரர்! மறப்பார்களா இந்திய ரசிகர்கள் இவரை?
pak shaheen shah afridi get 236 wicket
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் ஆட்டம் இலங்கையின் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தனஞ்செயா டி செல்வா 122 ரன்களும், மேத்யூஸ் 64 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெடுகளை பறிகொடுத்தனர்.
பாகிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 102 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
102 விக்கெட் ஒரு சாதனையா? என்று நீங்கள் கேட்கலாம், ஆம் சாதனை தான், வெறும் 23 வயதில், 26 ஆட்டங்களில் 102 விக்கெட் எடுப்பதற்கு பெயர் சாதனை தானே.
மேலும், ஐசிசி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற முதல் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி, டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 236 விக்கெட்களை விழுத்தி உள்ளார்.
அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
போதும் போதும் அவரைப்பற்றி புகழ்ப்பாடுவதை நிறுத்துங்கள்... என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. அப்படி நீங்கள் நினைப்பதும் நியாயம் தான்.
கடந்த 2021 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் தானே இந்த ஷாஹீன் ஷா அப்ரிடி.
மறக்க முடியுமா என்ன? இந்திய ரசிகர்கள் மறந்தாலும், விராட் கோலி தான் மறந்து விடுவாரா?
ஆனால் பாருங்க.., அதே தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தபோது, ஷாஹீன் ஷா அப்ரிடி மைதானத்திலேயே கதறி அழுதார்.
உங்களுக்கு அந்த காரணம் தெரியும் தானே? தெரியாதா? அதற்குள் மறந்துட்டீங்களா?
12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பரபரப்பான அந்த 19 வது ஓவரை வீசியது ஷாஹீன் ஷா அப்ரிடி. முதல் மூன்று பந்துகளில் 4 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்திய ஷாஹீன் ஷா அப்ரிடியின் கடைசி 3 பந்துகளையும், 3 சிக்ஸர்களா பறக்க விட்டு ஆட்டத்தை முடித்தார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேடு.
அந்த 3 சிக்சருக்கும் மதிப்பு என்ன என்று? உணர்ந்து, நிலைகுலைந்து மைதானத்திலேயே கண்ணீர் சிந்தி கதறினார் ஷாஹீன் ஷா அப்ரிடி.
English Summary
pak shaheen shah afridi get 236 wicket