அட கடவுளே! டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்பதான் இந்த சாதனையே பாகிஸ்தான் செய்துள்ளதா?! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மோட்டி 55 ரன்களும், வாரிகன் 36 ரன்களும், ரோச் 25 ரன்களும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணியின் நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி படைத்துள்ளார். 

1952 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் இதுவரை எந்த வீரரும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை மூலம் நோமன் அலி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAKvWI test cricket Noman Ali 3 wicket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->