பாரா ஒலிம்பிக் : பேட்மிண்டனில் தங்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Para Olympics PM Modi congratulates Nitesh Kumar for winning gold in Badminton
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதிழும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதங்கங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். இறுதியில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தங்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் வலைதளத்தில், பாரா பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிதேஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் அபார சாதனை படைத்துள்ளார் என்றும், அவர் தனது நம்பமுடியாத திறமைகள் மற்றும் விடாமுயற்சிக்காக அறியப்படுகிறார் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை அவர் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Para Olympics PM Modi congratulates Nitesh Kumar for winning gold in Badminton