பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி: பதக்கம் வென்ற இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா அணிக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரைஇறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இன்று வெண்கல புத்தகத்திற்கான ஆட்டத்தில், இந்திய அணி, ஸ்பெயின் அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்ய, கோலா அடிக்க முடியாமல் போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து சமன் செய்தது.

யார் வெல்வார் என்று அடுத்த ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக செல்ல,  33-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. 

ஸ்பெயின் அணியால் அடுத்து கோல் முடியாமல் போகவே, முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றது. கடந்த முறையும் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paris Olympics 2024 Hockey India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->