பாரிஸ் ஒலிம்பிக்: வரலாற்று சாதனை பறிபோனதுடன், பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர்! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்தியாவின் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், மனுபாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி, 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியதன் மூலம், இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்தது. 

மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக மனுபாக்கர் சாதனை புரிந்துள்ளார்.

50 மீட்டர் 3பி துப்பாக்கி சூடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதுவரை மொத்தம் 3 பதக்கங்களுடன் இந்தியா 48 வது இடத்தில உள்ளது.

இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாக்கர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதக்க வாய்ப்பை இழந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு பிரிவு துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 28 புள்ளிகளுடன் மனு பாக்கர் 4ஆம் இடம் பிடித்து, மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paris Olympics 2024 India Manu Bhakar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->